June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சாத்தான்குளம் சம்பவம் போல போலீஸ் நிலையத்தில் வாலிபரை சரமாரி தாக்கிய போலீசார்

1 min read
Seithi Saral featured Image

காவல் நிலையத்தில் வாலிபரை
சரமாரி தாக்கிய போலீசார்

7.7.2020

Cops attack a youth at the police station

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொல்லப்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் ரகுநாத் (23). கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்த இவர், கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கையொட்டி சொந்த ஊர் வந்தார். கடந்த மாதம் 5ம் தேதி நள்ளிரவு ரகுநாத் வீட்டுக்கு வந்த துறையூர் போலீசார் சந்தேகத்தின்ேபரில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கு தனி அறையில் வைத்து, நாள் முழுவதும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரகுநாத்துக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வலி பொறுக்க முடியாமல் அங்கிருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், உப்பு மற்றும் சோப்பு கரைசலை கொடுத்துள்ளனர். பின்னர் நிலைமை மோசமானதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு பின் வியாபாரிகளை மிரட்டியதாக வழக்கு பதிந்து திருச்சி மத்திய சிறையில் கடந்த மாதம் 7ம்தேதி அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த மாதம் 27ம் தேதி ஜாமீனில் வந்த ரகுநாத், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தன்னை பொய் வழக்கில் கைது செய்த துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், போலீசார் மணிகண்டன், செந்தில், கோவிந்தன், அசோக், கருணாநிதி, ஊர்காவல் படை வீரர் சுப்பிரமணி ஆகியோர் மீது கடந்த 3ம் தேதி மனித உரிமைகள் ஆணையம், முதல்வரின் தனிப்பிரிவு, டி.ஜி.பி, ஐ.ஜி., டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி.க்கு ஆன்லைன் மூலம் தனித்தனி புகார் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் காவல்துறை வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சி ெதாடரும் நிலையில், திருச்சி மாவட்டம் துறையூரிலும் காவல்நிலையத்தில் போலீசார் வாலிபரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஆசனவாயில் பிரச்னை

இதுகுறித்து ரகுநாத் கூறுகையில், காவல்நிலையத்தில் தனி அறையில் காட்டுமிராண்டித்தனமாக என்னை தாக்கினர். என்னால் இன்னும் நடக்க கூட முடியவில்லை. போலீஸ் தாக்குதலில் எனக்கு ஆசன வாயில் பிரச்னை உள்ளது. இதனால் இயற்கை உபாதையை கழிக்க முடியவில்லை. பொய் வழக்குப் போட்டு தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *