சாத்தான்குளம் தந்தை-மகன் சாவு வழக்கில் மேலும் 6 போலீசார் கைது?
1 min read
6 more policemen arrested in father-son death case
8-7-2020
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் மேலும் 6 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தந்தை-மகன் சாவு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் (வயது 60), அவரது மகன் பெனிக்ஸ் (31) ஆகியோர் போலீஸ் காவலில் இறந்தனர். அவர்கள் போலீசார் அடித்து தாக்கியதில் இறந்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த பிரச்சினையை மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக விசாரணைக்கு எடுத்து இதுபற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணை உத்தவிட்டது.
அவர்கள் இதை கொலை வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைந்தனர்.
6 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், போலீசார் ரேவதி, பியூலா செல்வகுமாரி, பிரான்சிஸ், சிறப்பு எஸ்.ஐ.,பால்துரை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த சிலரிடமும், இறந்த ஜெயராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று இரவும் சில போலீசாரிடம் விசாரணை நடந்தது. அப்படி விசாரணை நடத்தப்பட்ட போலீசாரில் 6 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இன்னும் அதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.