May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தயாரிப்பாளர்களை வசியம் பண்ணி பட வாய்ப்புகளை பறிக்கும் நடிகை

1 min read

9.7.2020

Actress who lures producers and snaps film opportunities

தமிழ் சினிமாவில் சாதாரண நாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் அந்த நடிகை.

சில வருடங்களுக்கு முன்பு தான் காதலித்த நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக எந்த படமும் சரியாக போகவில்லை. அதனால் பல பட வாய்ப்புகள் கையை விட்டுப் போய்க் கொண்டிருந்ததால் தரங்கெட்ட வேலையை செய்துள்ளார் அந்த பிரபல நடிகை.

தனக்கு முன்னாடி படவாய்ப்புகள் கொடுத்த பல முன்னணி தயாரிப்பாளர்கள் தொடர்புகொண்டு பட வாய்ப்புகளை தனக்கு தருமாறு கெஞ்சி வருகிறாராம்.

அதே சமயத்தில் மற்ற முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகளை கொடுக்காதீர்கள் எனவும் கேட்டு வருகிறாராம். சம்பளம் கம்மியாக இருந்தாலும் நானே நடிக்கிறேன் என்ற வேலையை செய்துள்ளார்.

இதை மாற்ற நாயகிகளுக்கு தெரிய செம கடுப்பில் இருக்கிறார்களாம். கல்யாணமான பிறகும் பட வாய்ப்புக்கு ஏன் இப்படி அலைய வேண்டும் என திட்டி தீர்க்கிறார்கள்.

அதிலும் முக்கியமாக டாப் நடிகர் ஒருவரின் பட வாய்ப்பை தட்டி பறித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அந்த பட வாய்ப்பை இழந்த முன்னணி நடிகை ஒருவர் இவர் மீது கொலவெறியில் இருக்கிறாராம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.