April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்-16 / நாடகம் / கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal 16 / Drama by Kadayam

காட்சி 16

இடம்&அசோக்குமார் வீடு

பங்குபெறுவோர்- அமுதா, ராஜேஷ்,

===============

(வீட்டில் அமுதா நிற்க, ராஜேஷ் கையில் கட்டுடன் வருகிறான்)

அமுதா: என்ன ராஜேஷ் கையில கட்டு. ஏதாவது ஆக்சிடெண்டா.

ராஜேஷ்: ஆக்சிடெண்டா… ஆமா…. இல்லை…. அது லேசான அடி.

அமுதா: என்ன உறருறீங்க… பலமான அடியாக இருக்கு. ஆனா லேசானதுன்னு மழுப்பறீங்க…

ராஜேஷ்: அது வேண்டாம் அமுதா. உங்களுக்கு இது தெரியவேண்டாம்.

அமுதா: ஏன் தெரிய வேண்டாம்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு தொழில் ரீதியா யாராவது போட்டியில இப்படி செய்துட்டாங்களா?

ராஜேஷ்: தொழில் போட்டியில என்மேல யாராவது கை வைக்க முடியுமா? இது வேற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க.

அமுதா: நான் வருத்தபடுவேனா? உன்மைய சொல்லுங்க ராஜேஷ்.

ராஜேஷ்: அது வந்து… என்னை அடிச்சது உங்க அசோக்குமார்தான்.

அமுதா: என்ன அவரா அடிச்சாரு?

ராஜேஷ்: அவருக்கிட்ட ஏதாவது கேட்டிங்களா?

ராஜேஷ்: நான் ஏன் அவருக்கிட்ட கேட்க போறேன். நான் உங்களுக்கான பைல்ல எடுத்துக்கிட்டு பேங்க்குக்கு போனேன். அப்போ என்னை மறிச்சி, நீ ஏன் மனைவிக்கு உதவி பண்ணுறன்னு சொல்லி சண்டைக்கு வந்தாரு? உதவிதானே பண்ணுறேன். இதுல என்ன தப்புன்னு கேட்டேன். அதுக்கு அவரு என் மனைவி இப்பவே என்னை மதிக்க மாட்டேங்கிறா, பணக்காரியா ஆயிட்டா எனனை கிள்ளு க்கீரையா நினைப்பா… அப்படி&இப்படின்னு சொல்லி, கீழே கிடந்த ஒரு கம்பி எடுத்து அடிச்சிட்டாரு. அவரோட வந்த ரெண்டு ரவுடி பசங்களும் என்னை அடிச்சாங்க.

அமுதா: அப்படியா அந்த மனுஷனுக்கு என்ன கொழுப்பு.

ராஜேஷ்: அது மட்டுமில்ல.. எம்  பொட்டாட்டிய நீ எப்படி போய் பார்க்கலாம்? எம் பொட்டாட்டிக்கு நீ எப்படி உதவி செய்யலாம்? எம் பொட்டாட்டிக்கிட்ட இனிமே சகவாசம் வச்சிக்கிட்டா உன் உயிரை எடுத்துடுவேன்னு சொன்னாரு.

அமுதா: எம் பொட்டாட்டின்னு சொன்னாரா? நான்தான் அவரை விட்டு பிரிஞ்சிட்டேனே. பிறகு ஏன் அப்படி சொல்றாரு? சரி நீங்க போலீஸ்ல புகார் பண்ணியிருக்க வேண்டியதுதானா?

ராஜேஷ்: போலீஸ்சா, அது வேண்டாங்க. அங்க போனா என்மேல பழிய போட்டுவிடுவாரு. போலீஸ்காரங்களும் அவரு பொட்டாட்டிக்கிட்ட ஏன் பேசற? அவங்க வீட்டுக்கு ஏன் போறன்னு என்ன கன்னாபின்னான்னு கேள்வி கேட்பாங்க.

அமுதா: அது எப்படி உங்க மேலத்தான் தப்பில்லையே.

ராஜேஷ்: எம்மேல தப்பு இல்லத்தான். ஆனா போலீஸ் எல்லாம் அவருக்கு தெரிஞ்சவங்க. அது மட்டுமல்லாம எம் பொட்டாட்டி எம் பொட்டாட்டின்னு சொல்வாரு. அப்போ எம்மேலத்தான் முழு தப்பு இருப்பதா போலீசும் நம்பும். பிறகு உன்னையும் போலீஸ் கூப்பிட்டு விசாரணை நடத்தும். எல்லாப்பிரச்சினையும் யோசிச்சி பார்த்துத்தான் அமைதியா இருந்துட்டேன்.

அமுதா: பொட்டாட்டி… ச்ச அவருக்கு பொட்டாட்டியா இருக்கிறதே அசிங்கமா இருக்கு. அவரை எம் புருஷன்னு சொல்றதுக்கே நான் வெட்கப்படறேன்.

ராஜேஷ்: என்னதான் இருந்தாலும் சட்டப்படி நீங்க அவருக்கு ஒய்ப்புதான். அவரு உங்களுக்கு புருஷன்தான்.

அமுதா: சட்டப்படி…. அப்படியா? ம்… ராஜேஷ் நாளைக்கே விவாகரத்துக்கு அப்ளை பண்ணுங்க. அதுக்கு ஒரு நல்ல வக்கீலப்பாருங்க.

ராஜேஷ்: அமுதா என்ன சொல்றீங்க.. அது தப்பு… தப்பு…

அமுதா: என்ன தப்பு? உங்களை இப்படி அடிச்சப்பிறகு சும்மா இருக்க மாட்டேன். நீங்களே சொன்னாலும் கேட்க மாட்டேன். நீங்க விவாகரத்துக்கு அப்ளை பண்றீங்களா? இல்ல நானே வக்கீல போய் பார்க்கட்டுமா?

ராஜேஷ்: வேண்டாம்.. நீங்க எங்கேயும் போக வேண்டாம். உங்களுக்காக வேண்டாவெறுப்பா இதை செய்யறேன். ஆனா நான் சொல்றதக் கேட்டுத்தான் விவாகரத்து பண்றதா அசோக்குமார் நினைப்பாரு.

அமுதா: உங்கள ஏதாவது சொன்னா எங்கிட்ட சொல்லுங்க. நான் நேர்ல போய் நாலு கேள்வி கேட்கிறேன்.

ராஜேஷ்: டென்சன் ஆகாதீங்க அமுதா. உங்க ஆசைய நான் நிறைவேற்றுகிறேன். சரி… வக்கீல் பீசுக்கு பணம் கொடுக்கணும். எங்கிட்ட செக் இருக்கு. அந்த செக்குல அடுத்த மாதம் 1&ந் தேதிய போட்டு கொடுத்திருக்கான்.

அமுதா: இல்ல… எனக்காக நீ நேரத்தை பார்க்காம வந்து உதவி பண்ணுறீங்க.. இதில பணத்தை வேற போடணும். எந்த செலவானாலும் பணத்தை நான் தந்துவிடுகிறேன். இப்ப… இந்த நகையை விற்றோ அடமானம் வைத்தோ பணம் வாங்கிக்கங்க.

ராஜேஷ்: நகையா-?

அமுதா: இது என் பிறந்த வீட்டு  சொத்து. இன்னும் நிறைய நகை இருக்கு. அப்புறம் விவாகரத்து ஆனா  அவரு ஜீவனாம்சம் தருவாருல்ல…

ராஜேஷ்:  ஆமா கண்டிப்பா கிடைக்கும்.

அமுதா: அந்தப் பணம் எனக்கு முக்கியம் இல்ல. ஆனா கல்யாணம் ஆகி இத்தனை நாளா என்ன பாடுபடுத்தினாரு. அதுக்காகவாவது அவருக்கிட்ட இருந்து பணத்தை வாங்கியே ஆகணும்.

(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.