கொரோனா ஊரடங்கில் சூர்யா ரசிகர்கள் செய்த உதவி
1 min readHelp from Surya fans at the Corona curfew
19-7-2020
கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் சூர்யாவின் ரசிகர்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பலர் வறுமையில் வாடுகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர். வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக திரு. வி. க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரெயில் நிலையம், ஜீவா ரெயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வருபவர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு தினமும் உணவளித்து வருகிறார்கள். மொத்தம்100 நாட்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி உள்ளார்கள்.