சிவகார்த்திகேயன் பாடலுக்கு கண்ணதாசன் பேரன் பாராட்டு
1 min read
Kannadasan’s grandson praises Sivakarthikeyan’s song
சிவகார்த்திகேயன் நடிக்க தயாராகி வரும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை நெல்வன் இயக்குகிறார். இவர் ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார், வினய் வில்லனாக வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெறும் செல்லம்மா எனும் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் லிரிக்கல் வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோரது நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
சிவகார்த்திகேயன் எழுதிய பாடலுக்கு, கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் டாக்டர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “கவிஞரே(சிவகார்த்திகேயன்) பயங்கர பார்ம்ல இருக்கீங்க போல, செம்ம சாங் அனிருத். அராஜகம் பண்றீங்க நெல்சன்” என்று வாழ்த்தி இருந்தார்.
ஆதவ் கண்ணதாசனின் இந்த பாராட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ““நன்றி பிரதர், பிளீஸ் என்ன கவிஞர்னு எல்லாம் சொல்லாதீங்க, உங்க தாத்தா ஆன்மா மன்னிக்காது. என்று குறிப்பிட்டுள்ளார்.