கனடாவில் சிக்கித் தவித்த நடிகர் விஜய்யின் மகன் வீடு திரும்பினார்
1 min read
Act0r Vijay's son return home from Canada
21-7-2020
கொரோனா ஊரடங்கால் கனடாவில் சிக்கித் தவித்த நடிகர் விஜய்யின் மகன் சீடு திரும்பினார்.
விஜய் மகன்
இளைய தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதால், சஞ்சய் இந்தியா திரும்ப முடியாமல் கனடாவிலேயே தவித்தார்.
அவர் கனடாவில் இருந்து வரமுடியாத நிலை நீடித்ததால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் இருந்தது.
ஊர் திரும்பினார்
இந்த நிலையில் தற்போது விஜய்யின் மகன் சஞ்சய் ஊர் திரும்பி விட்டார். அவர் விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். முறைப்படி சஞ்சய் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தனியாக இருந்தார். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர் நேற்று முன்தினம் தன் பெற்றோரை பார்க்கச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் நாடு திரும்பியதால் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.