June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா

1 min read

4,965 person affected for corona in TAMIL NADU today only

21-7-2020

தமிழ்நாட்டில் இன்று ஓரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டுமு் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

4,965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்டு தகவல்கள் வருமாறு:-

தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) 4,965 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 269 பேர்

சென்னையை தவிர, இன்று, திருவள்ளூரில் 366 பேருக்கும், விருதுநகரில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும், செங்கல்பட்டில் 256 பேருக்கும், கோவையில் 176 பேருக்கும், ராணிப்பேட்டையில் 173 பேருக்கும், திருவண்ணாமலையில் 163 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், கன்னியாகுமரியில் 159 பேருக்கும், மதுரையில் 158 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலியில் 77 பேருக்கும் தென்காசியில் 54 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

குணமானவர்கள்

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,887 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 78 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20 லட்சத்து 35 ஆயிரத்து 645 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,010 பேர் ஆண்கள், 1,955 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,09,838 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 70,782 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று 4,894 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 ஆக உள்ளது.

வயது வாரியாக…

இன்று மட்டும் கொரோனா பாதித்த 75 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,028 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,49,283 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 22 ஆயிரத்து 332 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் 21 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தேனியில் 4 பேரும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூரில் தலா 3 பேரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கடலூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா ஒருவரும் என 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *