May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கையா?- இன்றைய செய்திகள் சில…

1 min read

Today News in seithisaral

28-7-2020

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் திட்டம்

ரேஷன் விலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டு, போன்ற முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் கார்டு முறையை மேம்படுத்தி குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமே பொருட்களை வாங்கும் விதமாக அட்டைதாரர் கைரேகை பதியும் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கைரேகைப் பதிவு தோல்வியடைந்தால், ஆதார் எண்ணுக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பொருட்களை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

====

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலீசாருக்கு கொரோனா

காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா பாதிப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே முத்துராஜ், முருகனை விசாரித்த டெல்லி சிபிஐ அதிகாரிகள் 5பேருக்கு கொரோனா தொற்று உறுதியனது.

======

அரசை கேட்காமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடைவடிக்கை?

அரசை கேட்காமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்கள்: ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படடு உள்ளது. இது- மனிதாபிமானமற்ற செயல் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அரசை கேட்காமல் உயர் கல்வி படித்ததற்காக 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது, மனிதாபிமானமற்ற செயல் என, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ஆசிரியர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கல்வித் துறையின் செயல் உள்ளது என சாடியுள்ளார்.

கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறி விடக்கூடாது என்றும், அமைச்சர் தலையிட்டு பிரச்சினையை சுமுகமாக்க வேண்டும் எனவும் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.

====
என்.ஆர்.காங். பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பாலன் மரணம்

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என். ஆர்.காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பாலன்  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவருக்கு  கடந்த 23 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலனின் மறைவு என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலன் நியமன சட்டமன்ற உறுப்பினராகவும், ஏ.எப்.டி பஞ்சாலையின் வாரிய தலைவராகவும் 
பதவி வகித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் அரசியல் பிரமுகர் பாலன் ஆவார்.

இடைக்கால ஓய்வூதியம்- மத்திய மந்திரி தகவல்

கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் பணி ஓய்வு பெற்ற பணியாளர் சிலருக்கு வழக்கமான ஓய்வூதியத்திற்கான உத்தரவு கிடைக்கப்பெறாமல் போயிருக்கும் எனவும்,
இதனால், வழக்கமான நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பணியாளர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஆறு மாதம் வரை தேவைப்பட்டால் ஓராண்டு வரை இடைக்கால பென்ஷன் தொகை தொடரும் என்றும், விருப்ப ஓய்வு பெறும் பணியாளருக்கும் இந்த சலுகை கிடைக்கப் பெறும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

==================

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.