June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

‘மாஸ்டர்’ குறித்து சீக்ரெட் சொன்ன மாளவிகா

1 min read

4.8.2020

Malavika tells the secret about ‘Master’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்  மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே அதிரி புதிரி ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், தளபதி விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் மாஸ்டர் படத்தில் உங்கள் பெயரென்ன என்று ரசிகர் ஒருவர் கேட்க, ”சி என்ற எழுத்தில் எனது பெயர் தொடங்கும். இதற்கு மேல் சொன்னால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்னுறுவாரு” என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *