இந்தியாவில் ஒரே நாளில் 52,509 பேருக்கு கொரோனா
1 min read
All over India 52,509 person affected for corona
4-8-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 857 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
52,509 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோன நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(திங்கட் கிழமை)) ஒரே நாளில் 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 19,08,255 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 857 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 39,795 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 51,706 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,82,215 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,86,244 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
.
மாநிலம் வாரியாக…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் 4,57,956 ( 16,142)
தமிழ்நாடு 2,68,285 ( 4,349)
டெல்லி 1,39,156 ( 4,033)
ஆந்திரா 1.76.333 (1,604)
கர்நாடகம் 1,45,830 (2,704)
குஜராத் 65,599 ( 2,533)
உத்தரபிரதேசம் 1,00,310 (1,817)
தெலுங்கானா 70,958(576)
மேற்குவங்காளம் 80,984 (1,784)
ராஜஸ்தான் 46.679 (732)
மத்திய பிரதேசம் 34,285 (900)
பீகார் 61,788 (347)
அசாம் 48,161 (115)