June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கோழிக்கோட்டில் தரை இறங்கிய விமானம் இரண்டாக பிளந்து கோர விபத்து

1 min read

7.8.2020

Plane crashes in Kozhikode

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் ஊழியர்கள், பயணிகள் உட்பட 191 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானி உள்பட 3பேர் பலியானதாக முதலில் வந்த தகவல் தெரிவிக்கிறது. 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் கதி என்னாயிற்று என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விபத்து குறித்து பிரதமர் மோடி கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் பேசி விவரம் கேட்டறிந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *