June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு ரூ.225ல் தடுப்பூசி; “சீரம்” நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம்

1 min read


Vaccine for corona at Rs.225

8-8-2020
புனேயில் உள்ள ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம், 225 ரூபாயில் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

மராட்டிய மாநிலம் புனே நகரில் சீரம் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இது உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனமாகும்.
இந்தநிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை, ‘ஆஸ்ட்ரா ஜெனகா’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ளது. ஒரு டோஸ் 225 ரூபாயில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் தயாரித்த தடுப்பூ ஊரி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து வருகிறது. இதன் முதல் கட்ட பணி நிறைவடைந்த நிலையில் தற்போது, இரண்டாம் கட்டமாக மனிதர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தி பரிசோதித்து வருகிறது.

பில்கேட்ஸ்

இந்த நிலையில், இந்தியா மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவது தொடர்பாக, சீரம் நிறுவனம், பில்கேட்சின் ‘பில் அண்டு மெலிந்தா கேட்ஸ்’ அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், சீரம், 10 கோடி, ‘டோஸ்’ கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை உள்நாட்டிலும், வளரும் நாடுகளுக்கும் வழங்க வழி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பிற்காக, சீரம், 3,375 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில், நிமிடத்திற்கு, 500 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் வசதி உள்ளது.

ரூ.225 என்ற அளவில் தடுப்பூசி புழகத்திற்கு வரும் நிலையில், மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

225 ரூபாயில்…

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தின் விலையை அறிவித்துள்ளது. ‘கொரோனா தடுப்பூசி மருந்து, ஒரு டோஸ், 225 ரூபாய் என்ற விலையில், 92 நாடுகளில் விற்பனைக்கு வரும்’ என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *