June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மாநகராட்சி பகுதியில் 10-ந் தேதி முதல் கோவிலை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் திறப்பு

1 min read
Permission to open the small temple and driving school from 10th

8-8-2020

மாநகராட்சி பகுதியில் சிறிய வழிபாட்டுத்தலங்களை10-ந் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள்

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் சிற்சில தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி தற்போது கிராமப்புறங்கள் குறைந்த வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதாவது ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி கும்பிட்டு வருகிறார்கள்
இந்த நிலையல் மாநராட்சி பகுதியிலும் குறைந்த வருவாய் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10-ந் தேதி


ரூ.10 ஆயிரத்திற்கும் வருமானம் குறைவாக உள்ள வழிபாட்டு தலங்களை 10-ந் தேதி முதல் திறக்க, சென்னையில் மாநகராட்சி கமிஷனரிடமும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களிடமும் அனுமதி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள்( திங்கட்கிழமை) முதல், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *