June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நாளை கோகுலாஷ்டமி – கிருஷ்ணரை வழிபடும் நேரம்

1 min read

Tomorrow is Gokulashtami – the time to worship Krishna

10-8-2020
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்தான் கிருஷ்ணன். அந்தக்க கண்ணன் அவதரித்த நாளே கோகுலாட்டமி. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி 11-8-2020 அன்று வருகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து கண்ணனை வழிபட்டால் வீடு மகிழ்ச்சி அடையும் பிள்ளை செல்லவம் பெருகும். குழந்தைகள் நலமாக வாழ்வர்.
பூஜையின்போது கண்ணனின் உருவத்தையோ, படத்தையோ வைத்து பூஜிப்பது நல்லது. வழக்கமான நிவேத்தியங்களுடன் முருக்கு, சீடை போன்று பாதார்த்தங்களையும் படைப்பது நல்லது. மேலும் வீட்டின் வாசல்படி முதல் பூஜை அறை வரை கண்ணனின் பாதத்தை மாவினால் வரையவேண்டும். இதனால் கண்ணன் வீடு தேடி வந்து அருள்வதா ஐதீகம்.
11-ந் தேதி காலையில் 7-55 மிணிக்குத்தான் அஷ்டமி திதி ஆரம்பரமாகிறது. எனவே அதன் பிறகுதான் கிருஷ்ணரை வழிபடுவடுவது சிறந்தது. அன்று காலை சரியாக 8 மணிக்கு வழிபாடு நடத்தலாம். அதை விடுத்தால் பகல் 10-45 முதல் 11-45 வரையிலம் மாலையில் 4-45 மணி முதல் 5-45 மணி வரையிலும் இரவு 7-30 முதல் 8-30மணி வரையிலும் வழிபட சிறப்பான நேரம். அந்த நேரத்தில் பூஜையை வைத்துக் கொள்ளலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *