டெல்லியில் எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை
1 min read
AIIMS doctor commits suicide in Delhi
15-8-2020
டெல்லி எய்ம்ஸ் டாக்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர்
தெற்கு டெல்லி கவுதம் நகரில் வசித்து வந்தவர் மோஹித் சிங்லா. இவர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றார். அதன்பின் வேலைக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில் அவரது வீடு பூட்டியே கிடந்தது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்தனர்.
தற்கொலை
இதனையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். பூட்டிக் கிடைந்த வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது டாக்டர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி அப்துல் தாக்கூர் கூறுகையில், “டாக்டர் மோஹித் சிங்லா கடைசியாக கடந்த செவ்வாய்கிிழமை மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார். மனச்சோர்வு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.