June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சீனாவில் ரெஸ்டாரண்ட் இடிந்து 17 பேர் பலி

1 min read

Restaurant collapse in China kills 17

30-8-2020

சீனாவில் மாடி ரெஸ்டாரண்ட் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ரெஸ்டாரண்ட்

சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் சியாங்பென் கவுண்டி பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு ரெஸ்டாரண்ட் உள்ளது. இது விருந்துக்கு பயன்படுத்தப்படும் ரெஸ்ட்டாரண்டாகும்.

இந்த ரெஸ்டாரண்ட் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது ரெஸ்டாரண்டில் மொத்தம் 45 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

17 பேர் பலி

அதில், 17 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறத. 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 21 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அங்குள்ள சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு பணிகளில் 700 பேர் ஈடுபட்ட தாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *