May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

1 min read

There is no charge for digital currency transactions; Federal order to banks

30-8-2020

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், கடந்த ஜனவரி மாதம்1-ந் தேதி முதல் கட்டணம் வசூலித்தவர்களுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பண பரிவர்த்தனை

தற்போது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் மூலம் பணவர்த்தனையில் ஈடுபடுகிறார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்க வேண்டும் என்றால் தங்கள் வங்கி கணக்கில் இருந்து அவர்கள் வங்கி கணக்கிற்கு இணைய தளம் மூலம் பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மே சென்றால் சில வங்கிகள் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

கட்டணம் வசூலிக்க கூடாது

இது தொடர்பாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ,” நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது” என நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதியே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தற்போது மேற்கோள் காட்டி, அறிவிப்பை மீறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 1-ந் தேதி முதல் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வசூலித்த பணத்தை, மீண்டும் திருப்பி அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.