May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” படம் ஓ.டி.டி.யில் வெளியிடப்படுமா?

1 min read

Will Nayanthara starrer “Mookkuthi Amman” be released on ODT?

30-8-2020

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

சினிமா படங்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு கிடக்கின்றன. சினிமா படப்பிடிப்பும் நடைபெறவில்லை.
சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று வருகிற அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

மூக்குத்தி அம்மன்

மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா நடித்து இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ளது. இந்தப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். நயன்தாரா முழு நடிப்பில் இந்த கதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். அவரே என்.ஜே.சரவணனுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.