ராகு-கேது புராண வரலாறு
1 min readRahu-Ketu history
1-9-2020
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே அடிக்கடி நடந்த போரில் தேவர்கள் மாண்டு வந்தனர். தாங்கள் சாகாமல் இருக்க அமிர்தம் உதவும் என்பதை அறிந்த அவர்கள் அதை பெறவும் முயற்சி செய்தனர். பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும். கடைவதற்கு மேரு மலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பு கயிறாகவும் பயன்பட சம்மதித்தன. ஆனாலும் தேவர்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியவில்லை. எனவே அசுரர்களை சமரசம் செய்து துணைக்கு அழைத்தனர். கிடைக்கும் அமிர்தத்தில் பங்கு தருவதாகவும் கூறினார்கள்.
அதன்படி பல்வேறு இடர்பாடுக்குக்கு அப்பால் அமிர்தம் கிடைத்தது. அசுரர்களுக்கு அமிர்தத்தை கொடுத்தால் அவர்களின் இன்னல்கள் அதிகமாகவிடும் என்று கருதினார்கள். எனவே அசுரர்களுக்கு தெரியாமல் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு ஓடினர். அசுரர்கள் அவர்களை பின்னால் துரத்தினர்.
அப்போது மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கி அசுரர்கள் அமிர்தத்தை பெற மறந்தனர். இந்த நேரத்தில அசுரர்களுக்கு தெரியாமல் மோகினி அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை கொடுத்துக் கொண்டிந்தார்.
அப்போது ஒரு அசுரன் மட்டும் தேவர் உருவில் வந்து அமிர்தத்தை வாங்கி உண்டுவிட்டான். ஆனால் அவன் அசுரன் என்பதை சூரியனும் சந்திரனும் புரிந்து கொண்டனர். அவனை மகா- விஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்து விட்டனர். இதனால் விஷ்ணு அகப்பையால் அசுரனின் தலையை வெட்டினார். ஏற்கனவே துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையுடன் அசுரனின் உடலும் பாம்பின் உடலுடன் அசுரனின் தலையும் சேர்ந்து உயிர் பெற்றது. பாம்பின் உடலும் மனித தலையும் கொண்டதுதான் ராகு. பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டதுதான் கேது.
இந்த ராகு-கேதுக்கள் காளகஸ்தியில் உள்ள சிவனை வழிபட்டுதான் நவக்கிரங்களில் ஐக்கியமாயின.