பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் மரணம்
1 min read
actress Poornima bhakiyaraj’s mother died
2-8-2020
நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் மரணம் அடைந்தார்.
நடிகை பூர்ணிமா
நடிகரும், டைரக்டருமான கே.பாக்கியராஜின் முதல் மனைவி பிரவீணா. அவர் இறந்த பின்னர் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.
பூர்ணிமா-பாக்கிய ராஜ் திருமணம் கடந்த 1984 -ம் ஆண்டு நடந்தது. நடிகை பூர்ணிமாவின் தாயார் சுப்புலட்சுமி ஜெயராம்.
மரணம்
தற்போது 85 வயதாகும் சுப்புலட்சுமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
சுப்புலட்சுமியின் இறுதி சடங்கு நடைபெற்றது. இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.