நடிகர் பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய 3 பேர் மின்சாரம் தாக்கி சாவு
1 min read3 people who built a banner for the actor’s birthday were electrocuted and died
2-8-2020
பிரபல நடிகர் பிறந்த நாளையொட்டி பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்காரம் தாக்கி இறந்தனர்.
பிறந்த நாள்
தெலுங்கு திரை உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் ஜன சேனா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருக்கிறார்.
பவன் கல்யாணுக்கு இன்று( புதன் கிழமை) பிறந்தநாள். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 6 ரசிகர்கள் நேற்று (செவ்வாய்கிழமை ) இரவு 8.30 மணி அளவில் பேனர் வைத்துள்ளனர். பேனரின் இரும்பு கம்பி லைவ் வயரை தொடவே அந்த ஆறு பேருக்கும் ஷாக் அடித்திருக்கிறது.
3 பேர் சாவு
இதில் சோமசேகர்(30), அவரின் அண்ணன் ராஜேந்திரா(32) மற்றும் நண்பர் அருணாச்சலம்(28) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஜன சேனா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பவன் கல்யாண் கூறும்போது,
“பலியான 3 பேரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது என் கடமை” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2 பேர் பலி
பவன் கல்யாணுக்கு பேனர் வைக்கும் போது ரசிகர்கள் பலியானது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பவன் கல்யாணுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள்.