October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

விஜய்யின் 65-வது படத்துக்கு ரஜினி படத் தலைப்பு?

1 min read

Title of Rajini’s film for Vijay’s 65th film?

3-8-2020

நடிகர் விஜய்யின் 65-வது படத்துக்கு ரஜினியின் படத்தலைப்பை வைக்கப்போவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முடிவடைந்த நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
தயார் நிலையில் இருக்கும் இந்தப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.
இதற்கிடையே நடிகர் விஜய்யின் 65-வது படம் பற்றி பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் இயக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தளபதி

இந்தப் படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதனாவது மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான ‘தளபதி’ படத்தின் தலைப்பை இந்த படத்துக்கு வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் குறித்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.