இந்திய எண்ணெய் கப்பலில் தீவிபத்து
1 min read
Indian oil ship catches fire
4-9-2020
இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. ஆனால் தீயை உடனடியாக அணைத்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்திய கப்பலில் தீ
இந்திய நாட்டில் உள்ள எண்ணெய் கப்பலான ‘தி டைமண்ட்’ குவைத் நாட்டிலுள்ள மினா அல் அஹ்மாதி என்ற துறைமுகத்திலிருந்து 2 மில்லியன் பாரல்கள் கச்சா எண்ணெயை இந்தியாவின் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொணடிருந்தது.
கப்பல் இலங்கைக்கு கிழக்கே 23 நாட்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது நேற்று( வியாழக்கிழமை) காலை 7.45 மணியளவில் என்ஜின் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. கப்பலில் 23 பணியாளர்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அணைக்கப்பட்டது
அந்த கப்பலில் இருந்து அருகில் உள்ள இலங்கைக்கு தகவல் அனுப்பப்பட்டது. உடனேஇலங்கையிலிருந்து அந்நாட்டின் கப்பற்படையைச் சேர்ந்த 2 கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் அனுப்பப்பட்டது. கப்பலின் என்ஜின் பகுதியில் பரவிய தீ கார்கோ பகுதிக்கு பரவவில்லை. அதற்குள் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.