போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு- கன்னட நடிகை கைது
1 min read
Kannada actress arrested in connection with drug trafficking gang
4-9-2020
போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.
போதை மருந்து கடத்தல்
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை பரவலாக நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதை அடுத்து போதை மருந்து தடுப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சின்னத்திரை நடிகை உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கன்னட சினிமா உலக பிரபலங்கள் பலரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும் அவர்களுக்கு தாங்கள் சப்ளை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.
கன்னட நடிகை
இந்த போதை மருந்து கடத்தல் கும்பலுடன் கன்னட நடிகை ராகினி திவேதியும் தொடர்பு இருப்பது போலீசார் நடத்தி விசாரணையில் தெரியவந்தது. எனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக கன்னட நடிகை ராகினி திவேதியை இன்று(வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகும்படி சம்மன அனுப்பி இருந்தனர்.
ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் போலீசார் இன்று மாலை அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது
வீட்டில் இருந்த அவரை கைது செய்தனர்.