September 23, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: 25-ந் தேதி விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

1 min read

Tenkasi: Grievance redressal meeting for farmers and differently-abled persons on the 25th

22/9/2026

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் தலைமையில் 25.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டமும் நண்பகல் 12.00 மணி அளவில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர்வுநாள் கூட்டமும் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் (நீதிமன்ற கூட்டரங்கில்) வைத்து நடத்தப்படவுள்ளது.

எனவே மேற்படி கூட்டத்தில் தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை ஆலங்குளம், வீரகேரளம்புதூர் மற்றும் கடையநல்லூர் வட்டங்களைச் சார்ந்த விவசாய பெருங்குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *