September 24, 2026

Seithi Saral

Tamil News Channel

அருப்புக்கோட்டை பள்ளியில் ரூ.1.51 கோடி கையாடல்; திமுக நகராட்சி கவுன்சிலர் கைது

1 min read

Rs 1.51 crore misappropriated at Aruppukottai school; DMK municipal councillor arrested.

22.9.2026
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.51 கோடி கையாடல் செய்த திமுக கவுன்சிலர் மணிமுருகனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின் முறை பொது அபிவிருத்தி அறக்கட்டளைக்கு சொந்தமான சைவபானு ஷத்திரிய மேல்நிலைப்பள்ளியில் நிர்வாக பொறுப்பாளர்களாக திமு.க நகராட்சி கவுன்சிலர் மணிமுருகன், முருகதாஸ் ஆகியோர் இருந்தனர்.
அப்போது வைப்புத்தொகை ரூ.1.51 கோடியை மற்ற நபர்களின் உதவியோடு ரொக்கமாக பையில் வைத்து எடுத்து சென்றனர். இது குறித்து கேட்ட பொறுப்பு காசாளர் பாலனை மிரட்டினர்.

2022ம் ஆண்டு ஆக.12 முதல் 2024 மே 4 வரையான வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது புதிதாக பொறுப்பு ஏற்ற உதவிச்செயலர் பாஸ்கரன் இதனை கண்டறிந்தார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மணி முருகன், முருகதாஸ், பாபு, சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து மணி முருகனை கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *