June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு

1 min read

Increase in the number of corona experiments in India

9-9-2020

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 11,54,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன

89,706 பேருக்கு கொரோனா

இந்தியா முழுவதும் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆனது. கொரேனாாவுக்கு நேற்று மட்டுமு் 1,115 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் 73 ஆயிரத்து 890 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.
நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 74,894 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவை குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 98 ஆயிரத்து 845 ஆக உள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பால் 8 லட்சத்து 97ஆயிரத்து 394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பரிசோதனை

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 11,54,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 5,18,04,677 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *