அபிசேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் செப்.14ல் ஆடுகள் ஏலம்
1 min read
Goats auctioned on Sep. 14 at Abhisekapatti Cattle Farm
9-9-2020
நெல்லை மாவட்டம் அபிசேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் வருகிற 14-ந் தேதி ஆடுகள் ஏலம் விடப்படுகின்றன.
இதுதொடா்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆடுகள் ஏலம்
அபிசேகப்பட்டி மாவட்ட கால்நடைப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு கழிவு செய்யப்பட்ட 22 கீழக்கரிசல் ஆடுகள், 78 கன்னி ஆடுகள், 13 எல்டபிள்யூ வெண் பன்றிகள் ஆகியன வருகிற 14-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு பகிரங்க ஏலம் மூலம் பண்ணை வளாகத்தில் வைத்து விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள், டேவணித் தொகையாக 2 ஆயிரம் ரூபாய்க்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையை வருகிற 10-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
விவரங்கள்
வங்கி வரைவோலை துணை இயக்குநா், மாவட்ட கால்நடைப் பண்ணை, அபிசேகப்பட்டி என்ற முகவரிக்கு எடுக்கப்பட வேண்டும். டேவணித் தொகை வங்கி வரைவோலையாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
ஏலம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2338759 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
ஏலம் தொடா்பான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா்அலுவலகம், அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.