June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

1 min read

Comedian Vadivelu Balaji died

10-9-2020
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

வடிவேல் பாலாஜி

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு கைகளும் வாதத்தினால் முடங்கின. இதற்காக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை பெற அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மரணம்

இந்த நிலையில் அவர் இன்று(வியாழக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருக்கு வயது 45. வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு திரை உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்ந்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி

வடிவேல் பாலாஜி சினிமாவில் நடிக் வரும்முன்
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.
‘தலைநகரம்’ வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு, இவர் செய்த காமெடி சின்னத்திரையில் மிகவும் பிரபலபலமானது.

நடிகர் வடிவேலு போல் கெட்டப்பில் வந்து நகைச்சுவை நிகழ்ச்சியில் கலக்கியதால் இவரை வடிவேல் பாலாஜி என்று அழைத்தனர்.

சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடர்ந்து, கோலமாவு கோகிலா உள்டப சில படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார்.
சமீபத்தில் ஊரங்கில் சில தளர்வுகளை கொடுத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அப்போது சில படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்த நிலையில்தான் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.