June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

“எந்த மொழியையும் திணிக்க கூடாது”- வெங்கையா நாயுடு பேச்சு

1 min read

“No language should be imposed” – Venkaiah Naidu speech

14-9-2020

எந்த மொழியையும் திணிக்க கூடாது. அதேபோலல் எதிர்க்கவும் கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

வெங்கையா நாயுடு

இந்தி தினம் 2020 ஐ முன்னிட்டு நடந்த கருத்தரங்கில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாசார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். தென் இந்திய இந்தி பிரசார சபையை மகாத்மா காந்தி, 1918 ம் ஆண்டு தொடங்கினார்.

திணிக்க கூடாது

இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும். எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எதிர்க்கவும் கூடாது.

மக்களிடம் நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், இந்தி கற்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ், கன்னடம் தெலுங்கு போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்ற வேண்டும். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *