November 9, 2024

Seithi Saral

Tamil News Channel

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு சாப்பிடுகிறார் ; மகன் தகவல்

1 min read

SP Balasubramaniam eats food; Son information

19-9-2020

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு சாப்பிடுகிறார் என்று அவரது மகன் சரண் கூறினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் ஆகஸ்டு 14-ந் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. அதன்பின் அவரது உடல்நிலையில் சற்ற முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (சனிக்கிழமை) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

குணம் அடைந்து வருகிறார்

எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார். அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார்.
மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார்.
அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.