6 மாசம் புடிச்சு ஜெயில்ல போடுங்க… சூர்யாவை சீண்டும் ராதாரவி
1 min read22.9.2020
Put him in jail for 6 months … Radharavi teases Suryaசூர்யாவின் நீட் தேர்வு விவகாரம் தற்போது பல்வேறு விதமான பிரச்சினைகளை கிளப்பி கொண்டிருக்கிறது. மக்களிடம் ஆதரவு கிடைத்தாலும் அரசியல்வாதிகளிடம் நல்ல முறையான அனுசரிப்பு இல்லை.தொடர்ந்து சூர்யாவை தாக்கி பல அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஒருவர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் தருவதாக தெரிவித்திருந்தார்.
அதற்கு சூர்யா, அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு கொடுங்கள் என பதிலடி கொடுத்திருந்தார். இது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல மீண்டும் விவகாரங்களை சூடுபடுத்தியது.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது மூத்த நடிகர் ஒருவர் சூர்யாவுக்கு எதிராக பேசியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சினிமாவில் மூத்த வாரிசு நடிகராக இருப்பவர் ராதாரவி. அரசியல் கட்சிகளிலும் அவ்வப்போது இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் சூர்யா நீட்தேர்வு பற்றியும், அரசின் திட்டங்களை பற்றியும் சரியாகப் புரியாமல் எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இது மாதிரி பேசினால் 6 மாதம் சிறைத் தண்டனை கொடுங்கள் என பேசியுள்ளார்.
அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ராதாரவி தற்போது சூர்யாவை பற்றி பேசி மீண்டும் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.