நடிகை குஷ்பு பாரதீய ஜனதாவில் சேருகிறார்
1 min readActress Khushbu joins Bharatiya Janata Party
27/9/2020
நடிகை குஷ்பு காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேருவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் அந்தக் கட்சியில் சேர்ந்தார். அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவல்லை.
சமீபத்தில் அவர் சொன்ன கருத்துக்கள் கட்சிக்குள் விமர்சனத்திற்கு ஆளானது. ராகுல்காந்தி கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்காததால் புதிய தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் கருத்தை வெளியிட்டனர். இவர்களின் கருத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து பகிரங்கமாக கூறினார்.
இதனால் குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா மற்றும் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குஷ்பு மீது அதிருப்பதியில் இருப்பதாக கூறப்படுகிறார்.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சமீபத்தில் சென்னை வந்தார். அவரது வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் தன்னை தமிழக காங்கிரஸ் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.
பாரதீய ஜனதாவில்…
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்புவின் கணவர் சுந்தர் சி தமிழக பாரதீய ஜனதா தலைவர் முருகனை சந்தித்து பேசினாராம்.
இதனை கருத்தில் கொண்டு குஷ்பு விரையில் பாரதீய ஜனதாவில் இணையப்போவதாக பேசப்படுகிறது. விரைவில் டெல்லி சென்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இணைப்போவதாகவும் கூறப்படுகிறது.