May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை பயணப் பாதை

1 min read

History of SP Balasubramaniyam

25-/9/-2020


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாலசுப்ரமணியம் அப்போது சென்னை மாகாணம்( தற்போது ஆந்திர மாநிலம்) நெல்லூர் மாவட்டம் கொண்டம்பேட்டையில் 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சம்பமூர்த்தி. தாயார் சகுந்தலம்மா
தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞராக விளங்கினார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா[29] இளைய தங்கைகள். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

பாலசுப்பிரமணியம் இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் போது அதை கவனித்து கற்று வந்தார். இசை கருவிகளை வாசிக்கவும் பயிற்சி பெற்றார். குறிப்பாக ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதில் கைதேர்ந்து விளங்கினார்.
இவர் பள்ளிப்படிப்பு முடித்ததும் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனன்டபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

அங்கு படிக்கும்போதே டைப்பாய்டு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். என்ஜினீயரிங் படித்தாலும் இவருக்கு இசை மீது ஆர்வம் குறையவில்லை. எப்படியாவது பாடகனாக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவருடைய தந்தையோ படித்து முடித்து சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும் என்று விரும்பினார்.

இசைப்போட்டியில் பரிசு

கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாசார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றார்.
ஒருமுறை எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் மெல்லிசைக் குழு ஒன்றை அமைத்து அதை நடத்தி வந்தார். இதில் இளையராஜா பங்கு பெற்று ஹிட்டார் மற்றும் ஹார்மோனியம் வாசித்தார். அனிருதா ஹார்மோனியமும், பாஸ்கர் மற்றும் கங்கை அமரன் ஹிட்டாரும் வாசித்தனர்.
இவர்களோடு சேர்ந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி நாடகங்களில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

அவ்வப்போது அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்டு வந்தார்.
சினிமா வாய்ப்பு

எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற படத்தில் இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார்.
இந்தப் படம்1966-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி வெளிவந்தது.
அதன் பிறகு எட்டு நாட்களில் “நகரே அதே ஸ்வர்க” என்ற கன்னட மொழி படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் தமிழில்1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ஆனால் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியாகவே இல்லை.

அதன்பின் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் “இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி”
என்ற பாடலைப் பாடினார். இப்போதும் இந்தப் பாடல் தேனினும் இன்னிசையாக நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அதற்குப்பிறகு எம். ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார்.
மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் “இ கடலும் மறு கடலும்” பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.

சிவாஜி கணேசன்

சுமதி என் சுந்தரி படத்தில் முதன்முறையாக சிவாஜிகணேசனு்கு பொட்டு வைத்த முகமோ என்ற பாடலை பாடினார். இந்த படத்தில் பாட ஒப்பந்தம் ஆனவுடன் அவரிடம் சிவாஜி கணேசன் நீ எனக்காக குரலை மாற்றி பாட வேண்டாம் உள் இஷ்டப்படி பாடு, நான் உன்குரலுக்கு தகுந்தபடி நடித்துக்கொள்கிறேன் என்றார். அதன்படி மெல்லிய இனிமையான குரலுக்கு தகுந்தபடி சிவாஜி கணேசன் அந்த பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியமே சொல்லியுள்ளார்.
இவர் பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.
எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கர்நாடக சங்கீதத்தை முறைபடி கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். அடுத்து இவருக்கு ஏக் தூஜே கே லியே (1981-ம் ஆண்டு) என்ற இந்தி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடினார். குறிப்பாக மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது.

1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஏ ஆர் ரகுமானின் ரோஜா படத்தில் இவர் மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் “ஜுலை மாதம் வந்தால்” பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும்.
கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் “மானூத்து மந்தையிலே மாங்குட்டி” பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.

பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு
எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடினார்.

எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் “நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்” தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.

பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.
2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருது பெற்றுள்ளார்.

பின்னணி குரல்

நடிகர் கமல்ஹாசனுக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த சிப்பிக்குள் முத்து என்ற தெலுங்கு படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசனுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான்.
கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

குடும்ப வாழ்க்கை

பாலசுப்பிரமணியம் காதல் திருமணம் செய்து கொண்டார். மனைவி பெயர் சாவித்ரி. இந்த தம்பதியருக்கு பல்லவி என்ற மகளும், எஸ். பி. பி. சரண் என்ற மகனும் உள்ளனர். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நடிப்பு

பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.