பள்ளிக்கூட மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 34 school students in Karnadaka
10/10/2020
கர்நாடகாவில் பள்ளிக்கூட மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் சில மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டம் திம்மாபூர் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் கல்வி சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியகாமா என்ற திட்டம் அரசு சார்பாக தொடங்கப்பட்டது.
கொரோனா
இந்த திட்டத்தின் படி பெலகெவி மாவட்டத்தில் 195 மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்றனர். அதில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதித்த மாணவர்கள் 3, 4ம் வகுப்பு படிக்கிறார்கள்.
இந்த சம்பவத்தால் வித்யகாமா திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை மாநில கல்வித்துறை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.