அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் மரணம்
1 min read
A.M.M.K Treasurer Vertivel Death
15/10/2020
அ.மு.க.க.வின் பொருளாளர் வெற்றிவேல் மரணம் அடைந்தார்.
வெற்றிவேல்
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்தவர் வெற்றிவேல். இவர் கடந்த சில மாதங்களாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்தார். சர்க்கரை நோயாளியான அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இதனால் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
காங்கிரஸ்
வெற்றிவேல் ஆரம்பத்தில் காங்கிரசில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் அ.தி.மு.க. வில் இணைந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார் தொடர்ந்து இந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட இருந்ததால் வெற்றிவேல் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் 2016-ம் ஆண்டு தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணிக்கு மாறினார். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குழுவிலும் இடம் பெற்றார்.
அரசுக்கு எதிராக செயல்பட்டதாக 18 எம்.எல்.ஏக்களின் மீது எடுத்த நடவடிக்கை காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் தொடர்ந்து தினகரன் தொடங்கிய அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக இருந்து வந்தார்.