தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா- 5,055 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona to 4,410 people in Tamil Nadu today – 5,055 people discharged
15/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,410 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் இன்று மட்டும் 5,055 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( வியாழக்கிழமை) ஒரே நாளில் 4,410 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 192 ஆய்வகங்களில் 90,752 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 86 லட்சத்து 74 ஆயிரத்து 793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 2,660 பேர் ஆண்கள். 1,750 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,07,577. பெண்களின் எண்ணிக்கை 2,67,193. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 .
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,055 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 49 பேர் இறந்துள்ளனர். இதில் 27 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 22 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு10,472 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 41,872 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்..
சென்னையில் இன்று மட்டும் 1,148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை கொரேனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை1,86,667 ஆகும்.
கோவையில் 395 பேருக்கும், சேலத்தில் 263 பேருக்கும், செங்கல்பட்டில் 255 பேருக்கும், திருவள்ளூரில் 192 பேருக்கும், நாமக்கலில் 148 பேருக்கும், திருப்பூரில் 146 பேருக்கும், ஈரோடில் 126 பேருக்கும், கடலூரில் 120 பேருக்கும், வேலூரில் 114 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 112 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 51 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கும், தூத்துக்குடி மாவட்த்தில் 43 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 18 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், கோவை, காஞ்சிபுரத்தில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, ஈரோடு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் தலா 2 பேரும், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம், தென்காசி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1,257 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்ட்டனர். கோவையில் 670 பேரும், செங்கல்பட்டில் 349 பேரும், திருப்பூரில் 260 பேரும், சேலத்தில் 219 பேரும், திருவள்ளூரில் 164 பேரும், நாமக்கலில் 158 பேரும், காஞ்சிபுரத்தில் 137 பேரும், நீலகிரியில் 131 பேரும், கடலூரில் 130 பேரும், ஈரோடில் 122 பேரும், திருவண்ணாமலையில் 116 பேரும், கன்னியாகுமரியில் 111 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.