August 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரான்சில் 2-வது அலை கொரோனா; மீண்டும் ஊரங்கு

1 min read

nd wave corona in France; Squeeze again

15/10/2020

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலையாக பரவுகிறது. இதனால் அங்கு சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2-வது அலை கொரோனா

கொரோனா வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. சில நாடுகளில் கொரோனா ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அது 2-வது அலையாக மீண்டும் பரவும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஐரோப்பிய நாடான பிரான்சில் தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. அங்கு இதுவரை 7 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

மீண்டும் ஊரடங்கு

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வருகிற சனிக்கிழமை(நாளை மறுநாள்) தொடங்கி, காலை 9 மணி முதல், மாலை 6 மணி வரை, 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *