August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. எம்.பி.யின் 8.6 கோடி சொத்துக்கள் முடக்கம்

1 min read

DMK MP Gautam Sikamani’s assets worth Rs 8.6 crore frozen

17/10/2020

ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாக தி.மு.க. எம்.பி.யான கவுதம் சிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

திமுக எம்பி கவுதம் சிகாமணி

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது மகன் கவுதம் சிகாமணி. இவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.பி.யாக உள்ளார்.

இவரது ரூ.8.6 கோடியிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அந்நிய செலவாணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அதனடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *