சபரிமலை ஏறும்போது முகக்கசவம் அணிய வேண்டாம்
1 min read
Do not wear a face mask when climbing Sabarimala
16/10/2020
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் கூறியுள்ளார்.
முகக்கவசம்
கொரேனாா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிபடியாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனடி தற்போது கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் இன்று முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதுபற்றி கேரள முதல்மந்திரி பிரனாயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலையேறும்போது முகக்கவசம் அணிந்து இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால், பக்தர்கள் அப்போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்.
ஆனால், மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அணிய வேண்டும்.
மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கும்பலாக மலை ஏற வேண்டாம். கிருமிநாசினியை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த பக்தர்கள், அதற்கான சான்றுகளுடன் வந்தால் உதவிகரமாக இருக்கும்.
இதேபோன்று, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.
250 பேருக்கு…
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தினமும் 250 பேரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அய்யப்ப பக்தர் மலையேறுவதற்கு தகுதியானவர் என்று உறுதியளிக்கும் மருத்துவ சான்றிதழும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு பிரனாயி விஜயன் கூறினார்.