நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபர் கைது
1 min readBusinessman arrested for sexually harassing woman in Nellai
17/10/2020
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில் அதிபர்
நெல்லை டவுனைச் சேர்ந்தவர் ஜவஹர் (வயது45), தொழில் அதிவரான இவருக்கு சொந்தமான வணிக நிறுவனத்தில் பேட்டையைச் சேர்ந்த 23 வயது பெண் வேலை பார்த்து வந்தார்.
அந்தப் பெண்ணிடம் ஜவஹர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறிதது அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழில் அதிபர் ஜவஹரை கைது செய்தார்.
இந்த சம்பவம் டவுன் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.