May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்

1 min read

exual harassment of Vijay Sethupathi’s daughter

20/10/2020
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

“800” படம்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடக்கக் கூடாது என்றும் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

பாலியல் மிரட்டல்

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஒருவன் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி புகார் செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
சிறுமிக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்துக்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.