நயன்தாரா புதிய மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தம்
1 min read
Nayanthara signed to star in new Malayalam film
22/10/2020
நயன்தாரா புதிய மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தை அப்பு இயக்குகிறார்.
நயன்தாரா
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த
2019-ம் ஆண்டு நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற மலையாள்ப் படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு புதிதாக எந்த மலையாள படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது புதிய மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பதமாகி இருக்கிறார். இந்தப்படத்தை அப்பு என். பட்டாதிரி இயக்குகிறார். இவர் கூறிய கதை பிடித்துவிடவே, உடனே ஒப்பந்தமாகியுள்ளார்.
அப்பு என்.பட்டாதிரி
பல்வேறு படங்களுக்கு எடிட்டராக இருந்தவர் . இவர் கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றுள்ளார். தற்போது ‘நிழல்’ என்ற புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அப்பு என்.பட்டாதிரி.
12 ஆண்டுகளுக்குப் பிறகு…
இதில் குஞ்சாகோ போபன், நயன்தாரா இவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கவுள்ளனர். எர்ணாகுளம் பகுதிகளைச் சுற்றியே முழுப்படத்தையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஆண்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, படுஷா, ஃபெலினி மற்றும் ஜினிஷ் ஜோஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஞ்சீவ் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக தீபக் டி.மேனன், இசையமைப்பாளராக சூரஜ் ஆகியோர் உள்ளனர்