June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியன்-2 படம் தாமதம்; சங்கரின் இன்னொரு பிரமாண்டம்

1 min read

Sankar will directe other Mass film

1/11/2020

இந்தியன் -2 படம் தாமதமாவதால் இயக்குனர் சங்கர் இன்னொரு பிரமாண்ட படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்தியன்-2

கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் வெற்றிப்பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாக இருந்தது. இந்தப்படத்தை சங்கர் இயக்குவதாக இருந்தது.

சங்கர் என்றாலே பிரமாண்டம் என்று பெயர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது.

சங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தற்போது மீண்டும் தொடங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரமாண்டம்

இதனால், சங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்டவுனில் இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை ஷங்கர் முடித்துவிட்டாராம். இந்தப் படத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். மேலும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க சங்கர் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.