May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் சூர்யா நடிக்கும் 3 புதிய படங்கள்

1 min read

3 new films starring actor Surya

1/11/2020

நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தை அடுத்து 3 புதிய படங்களில் நடிக்கிறார்.

நடிகர் சூர்யா

சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று என்ற படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட இருந்தது. ஆனால்
கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவது தள்ளிப்போனது.
இதனால் இந்தப் படத்தை வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர்.

சுதா கொங்கரா இயக்கி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3 புதிய படங்கள்

இந்த நிலையில் நடிகர் சூர்யா தான் அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி முதலாவதாக மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் நடிக்க உள்ளார்.

இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த ப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

அதன்பின்னர், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். இப்படத்தை வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.