June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மக்களுடன்தான் கூட்டணி என கமல்ஹாசன் அறிவிப்பு

1 min read

Kamal Haasan announces alliance with the people

2/11/2020

வருகிற சட்டசபை தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று அவரே அறிவித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை.
கமல்ஹாசன் ஏற்கனவே கட்சி தொடங்கிவிட்டார். அவர் இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்று அரசியில் விமர்சகர்கள் கூறினார்கள்.

மக்களுடன்…
இந்த நிலையில் சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் கூறும்போது, “வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுடன்தான் கூட்டணி.
கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும்.” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *