கடையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
1 min read
Anti-drug awareness rally in Kadayam
6.8.2026
கடையத்தில் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியும் காவல் நிலையமும் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, கோவிந்தப்பேரி கலைவாணி கல்வி மையம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மற்றும் கடையம் காவல் நிலையம் இணைந்து, 06.08.2026 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இப்பேரணியை கலைவாணி கல்வி மையம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் அக்ஷ்யா சிவராமன் மற்றும் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கடையம் காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடையம் பொது நூலகத்தை அடைந்தது. மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, மகாகவி பாரதியார் மற்றும் செல்லம்மாள் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், துணைக் காவல் ஆய்வாளர் மாடசாமி, கலைவாணி கல்வி மையம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் அக்ஷ்யா சிவராமன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் மற்றும் கடையம் பொது நூலகர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் “போதைப்பொருளைத் தவிர்ப்போம்; போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
நிகழ்வில் சுமார் 90 மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள், காவல்துறையினர், சமூகநல ஆர்வலர்கள், நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவில், கலைவாணி கல்வி மையம் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ராஜன் நன்றி தெரிவித்தார்.
One attachment • Scanned by GmailAdd to Drive