August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை: பைக் மீது டிராக்டர் மோதியதில் ஒருவர் பலி 

1 min read

Sengottai: One killed after tractor collides with motorcycle.

6.8.2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் பைக்கில் சென்ற ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.செங்கோட்டை அடுத்துள்ள கலங்காத கண்டி பகுதியைச் சார்ந்த குமரேசன் என்பவரது மகன் மாரிக்கண்ணு (வயது 24) மற்றும் பெ.மதியழகன் என்பவரது மகன் கௌதம்

 (வயது 23)  ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக டிராக்டர்  மோதிய விபத்தில் இருவரும் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே மாரிக்கண்ணு என்பவர் பலியானார்.

 இதில் பலத்த காயம் அடைந்த கௌதம்  அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *