June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க தேர்தல் முடிவு மோசடி என டிரம்ப் குற்றச்சாட்டு; ஜோ பைடன் பதிலடி

1 min read

Trump accuses Modi of US election results; Joe Biden retaliates

4/11/2020

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளனார். அதற்கு ஜோ பைடன் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 237 இடங்களிலும் , டிரம்ப் 213 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பான்மையை பெற 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.
பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடிக்கிறது.

விசித்திரமாக…

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து டிரம்ப் டுவிட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமாக உள்ளன. அமெரிக்காவின் பல முக்கிய மாநிலங்களில் நேற்றிரவு நான் முன்னிலையில் தான் இருந்தேன். திடீரென சில வாக்குச்சீட்டுகள் எண்ணத் தொடங்கியதால் முடிவுகள் லேசாக மாறத் தொடங்கின’. என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மோசடி

மேலும் தேர்தல் நிலவரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தலில் மகத்தான ஆதரவு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் செய்கின்றனர்.

இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

ஜோ பைடன் பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜோ பைடன் “டிரம்பின் இந்த குற்றச்சாட்டு மூர்கத்தனமானது, முன்னோடியில்லாதது மற்றும் தவறானது. இதன்மூலம் அமெரிக்க குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க டிரம்ப் முயற்சிக்கிறார்.” என்றார்.

பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்தால் டிரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *